< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் திரண்டு வந்து புகார் மனு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பொதுமக்கள் திரண்டு வந்து புகார் மனு

தினத்தந்தி
|
28 Nov 2022 10:48 PM IST

சோலார் நிறுவனத்திற்காக பனைமரங்கள் அழிக்கப்படுவதாக பொதுமக்கள் திரண்டு வந்து புகார் மனு அளித்தனர்.


சோலார் நிறுவனத்திற்காக பனைமரங்கள் அழிக்கப்படுவதாக பொதுமக்கள் திரண்டு வந்து புகார் மனு அளித்தனர்.

மனு

கடலாடி தாலுகா சிறைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.புதுநகர், காமராஜபுரம், தனிச்சியம், செவல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:- எங்கள் பகுதியில் அனைவரும் பனை மரங்களை நம்பி தொழில் செய்து வாழ்ந்து வருகிறோம். பல தலை முறைகளாக இதுதான் எங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்தநிலையில் எங்கள் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்களை அழித்து வருகின்றனர். இதனால் எங்களின் வாழ்வதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக பலமுறை மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை. தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதை தடைசெய்துள்ள நிலையில் அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.

எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பனை மரங்கள் வெட்டுவதைதடுத்து நிறுத்துவதோடு அரசின் உத்தரவை மீறி பனைமரங்களை வெட்டிய நிறுவனத்தின் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுதி

இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களின் ஆதார் கார்டு, ரேசன்கார்டு உள்ளிட்ட அரசின் ஆவணங்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்வதை தவிர வழியில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்