நாமக்கல்
வெல்ல ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
|வெல்ல ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் ராஜீவ்காந்தி காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு தனியாருக்கு சொந்தமான 2 வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகிறது. அங்கு பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள் மற்றும் துணிகளை எரிபொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் அங்கிருந்து மாசடைந்த கரும்புகை வெளியேறுகிறது. இதன் காரணமாக எங்கள் பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் ஆலையில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வெல்ல ஆலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.