< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டியில்விவசாய நிலத்தை கையகப்படுத்த முயற்சிகுடும்பத்தினர் கலெக்டரிடம் மனு
|2 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்த விவசாயி முனுசாமி, அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அவர்களை நுழைவுவாயில் தடுத்து நிறுத்திய போலீசார் முனுசாமி குடும்பத்தினரை மட்டும் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்
எங்களுக்கு ஊரின் அருகே 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் கடந்த 28 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் எங்களது விவசாய நிலத்தை ஆக்கிரமிக்க செய்ய சிலர் முயல்கின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளித்து எங்களது நிலத்தை அனுபவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.