< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்மனு கொடுக்க வந்த 100 வயது மூதாட்டிதனது காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் எம்.எல்.ஏ.
|6 Sept 2023 1:00 AM IST
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பென்னாகரம் வட்டம் தட்டாரஅள்ளி அடுத்த வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டி முனியம்மாள் என்பவர் கோரிக்கை மனு கொடுக்க வந்தார். தனது 3-வது மகன் சொத்தை அபகரித்து கிரயம் செய்து கொண்டதாக கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு அந்த மூதாட்டி வெளியே வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்த வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., காலில் செருப்பு இன்றி தள்ளாடியபடி நடந்து வந்த அந்த மூதாட்டியை பார்த்து நலம் விசாரித்தார். வந்த செய்தியை கேட்டறிந்த பின்னர் அந்த மூதாட்டிக்கு ஒரு சிறிய தொகையை வழங்கி தனது சொந்த காரில் பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இதனை பார்த்து அங்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மனம் நெகிழ்ந்து பாராட்டினர்.