திருப்பூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 406 மனுக்கள் குவிந்தன
|கலெக்டர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 406 மனுக்கள் குவிந்தன
கலெக்டர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 406 மனுக்கள் குவிந்தன
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 406 மனுக்கள் பெறப்பட்டன. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆண்கள், பெண்கள் என அவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மனுதாரர்கள் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆணையாளர் (கலால்) ராம்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.