< Back
மாநில செய்திகள்
நிலத்தை மீட்டு தரக்கோரிதர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி மனு
தர்மபுரி
மாநில செய்திகள்

நிலத்தை மீட்டு தரக்கோரிதர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி மனு

தினத்தந்தி
|
21 July 2023 12:30 AM IST

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாபில்பருத்தியை அடுத்த பழைய ஒட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி தசரதன் தனது குடும்பத்தினருடன் நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அதில் பழைய ஒட்டுப்பட்டியில் தனக்கு சொந்தமான 85 சென்ட் நிலம் உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.8.25 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இதற்காக எனது நிலத்தை அவருடைய பெயரில் பதிவு செய்து கொடுத்தேன்.

5 ஆண்டுகளுக்குள் பணத்தை வட்டியுடன் திரும்பி கொடுத்தால், நிலத்தை திரும்பி வழங்கிவிடுவதாக அவர் எனக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு வட்டியுடன் பணத்தை கொடுத்தபோது அவர் பணத்தை வாங்க மறுக்கிறார். மேலும் நிலத்தை தராமல், மிரட்டல் விடுக்கிறார். எனவேஅவரிடம் இருந்து எனது நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்