தூத்துக்குடி
பேரூரணி பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
|பேரூரணி பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.
புதுக்கோட்டை அருகே உள்ள பேரூரணி இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 3-ந் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர்.
பின்னர் சங்குமுகம் புறப்படுதல், தீர்த்தம் கொண்டு வருதல், அம்மனுக்கு அலங்கார பூஜை, நேர்த்திகடன் மற்றும் முளைப்பாரி எடுத்தல், சாமி ஊர்வலம் வருதல், சாமக்கொடையும், வானவேடிக்கையும் நடந்தது. மறுநாள் காலையில் பொங்கலிடுதல், மதியம் அம்பாள் மஞ்சள் நீராடி வருதல், மாலையில் கிடா அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி வில்லிசை நிகழ்ச்சி, ஆடல், பாடல் நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து இருந்தனர்.