< Back
மாநில செய்திகள்
கால்நடைகளின் நோய் தீர்க்கும் ஹரிபெருமாள் கோவில்
திருப்பூர்
மாநில செய்திகள்

கால்நடைகளின் நோய் தீர்க்கும் ஹரிபெருமாள் கோவில்

தினத்தந்தி
|
13 Oct 2023 11:56 PM IST

ஜல்லிபட்டி கிராமத்தில் கால்நடைகளின் நோய் தீர்க்கும் தெய்வமாக வீற்றிருக்கும் ஹரிபெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை இன்று நடக்கிறது.

ஜல்லிபட்டி கிராமத்தில் கால்நடைகளின் நோய் தீர்க்கும் தெய்வமாக வீற்றிருக்கும் ஹரிபெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை இன்று நடக்கிறது.

ஹரிபெருமாள் கோவில்

கோவில்கள் நிறைந்த கொங்கு வளநாட்டில் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா ஜல்லிப்பட்டி கிராமத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்து இப்பகுதி மக்கள் அனைவருக்கும் அருள்பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீஹரிபெருமாள் சுவாமிகளின் புகழ் இந்த பகுதி மக்கள் அனைவரும் அறிந்ததாகும். மேலும் இந்த கோவிலில் மற்ற எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஒரு சக்தி ஸ்ரீஹரிபெருமாளுக்கு உண்டு.

அதாவது இ்ங்கு வணங்கி செல்கின்ற பக்தர்களுக்கு மட்டும் இல்லாது உழவர்களுக்கு உறுதுணையாக இருந்து விவசாயத்துக்கு பெரிதும் பாடுபடும் கால்நடை, எருது, மாடுகளுக்கு ஏதாவது ஒரு நோய் வந்து விட்டால் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை வணங்கி கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை கால்நடைகளுக்கு தெளித்தால் அந்த நோய் உடனடியாக குணமாகும். இதற்காக இந்த பகுதி மக்கள் கால்நடைகளை உருவாரமாக செய்து இந்த ஆண்டவன் கோவிலில் வைத்து வணங்கி செல்வார்கள்.

கோவில் சிறப்பு

இந்த கோவிலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஹரிபெருமாள் முதலை வாயில் தன் கால்கள் சிக்கியவுடன் 'ஆதிமூலமே' என்று கஜேந்திரன் என்கிற யானை பெருமாளை அழைத்தவுடன் அங்கு தோன்றி கஜேந்திரனை காப்பாற்றியதால் கஜேந்திரன் கருடாழ்வாருக்கு சிவனின் வடிவமாக முன்நின்று பெருமாளை வணங்குகின்ற காட்சி தமிழகத்தில் இந்த கோவிலில் மட்டுமே உள்ளதாகும்.

இதனால் இந்த கோவிலுக்கு ஸ்ரீஹரிபெருமாள் திருக்கோவில் என்ற பெயரும் உருவானது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீஹரிபெருமாளும், ஸ்ரீவைத்தீஸ்வர பெருமாளும் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது இ்ங்கு சிறப்பான ஒன்றாகும். சிவனுக்கும், பெருமாளுக்கும் உரிய அனைத்து பூஜைகளும் தவறாமல் 3 வேளையும் நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை 5 வாரமும் இந்த பகுதியில் அனைத்து பக்தர்களும் திரளாக கலந்துகொண்டு ஆண்டவன் அருள் பெற்று செல்வார்கள். அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று இந்த கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் திரளாக கலந்துகொள்கிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்