< Back
மாநில செய்திகள்
எச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முககவசம் அணியவேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மாநில செய்திகள்

"எச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முககவசம் அணியவேண்டும்" அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தினத்தந்தி
|
23 Sept 2022 9:04 PM IST

நாளை தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தவிருப்பதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

எச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், காய்ச்சலால் தமிழகத்தில் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது,

தமிழகம் முழுவதும் எச்1என்1 காய்ச்சலால பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி தொடங்கி இன்று வரை 1166 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நேற்று 368 ஆக இருந்த பாதிப்பு தற்போது 371 ஆக உயர்ந்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணியவேண்டும்.

இந்த வகை காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை. தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக காய்ச்சல் முகாம்களை கூடுதலாக நடத்த முடிவெடுக்கப்பட்டு நாளை ஒரே நாளில் தமிழகத்தின் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தவுள்ளோம்.

இந்த முகாமுக்கு சளித்தொல்லை, இருமல், தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள மக்கள் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்