< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் கேந்திரிய வித்தியாலயா பள்ளி தொடங்க அனுமதி - மத்திய அரசு ஒப்புதல்
மாநில செய்திகள்

திருவொற்றியூரில் கேந்திரிய வித்தியாலயா பள்ளி தொடங்க அனுமதி - மத்திய அரசு ஒப்புதல்

தினத்தந்தி
|
26 Feb 2023 6:09 PM IST

ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை,

வடசென்னை பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இது குறித்து வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, திருவொற்றியூரில் ரெயில்வேக்கு சொந்தமான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டு தற்காலிகமாக வகுப்புகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார். மேலும் கொடுங்கையூர் குப்பைமேடு பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.


மேலும் செய்திகள்