கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்ய அனுமதி - பள்ளி கல்வித்துறை உத்தரவு
|தேவைப்படும் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு சில நிபந்தனைகளையும் கல்வித்துறை விதித்திருக்கிறது.
சென்னை,
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றாலும், தேவைப்படும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி நாள் வரை மறு நியமனம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அனுமதித்துள்ளது.
அவ்வாறு தேவைப்படும் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு சில நிபந்தனைகளையும் கல்வித்துறை விதித்திருக்கிறது. அதன்படி, அந்த ஆசிரியரின் பண்பு மற்றும் நடத்தை திருப்திகரமாக இருக்க வேண்டும். தொடர்ந்து பணிபுரியும் அளவுக்கு அவர் உடல் தகுதி பெற்று இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாணவர்களின் கல்வி நலன் கருதியும், கற்பித்தல் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் 2022-23-ம் கல்வியாண்டில், தேவைப்படும் ஆசிரியர்கள் ஓய்வுபெற்றாலும் அவர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதிவரை மறு நியமனம் செய்துகொள்ள அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.