< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி
|14 Sept 2022 12:25 AM IST
அரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுகாவில் தூத்தூர், மேலவரப்பன்குறிச்சி மற்றும் திருமழப்பாடி ஆகிய கிராமங்களிலும், செந்துறை தாலுகாவில் தளவாய், கூடலூர் கிராமம் மற்றும் ஆண்டிமடம் தாலுகாவில் காடுவெட்டி ஆகிய கிராமங்களிலும் 14-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகே உள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.