< Back
தமிழக செய்திகள்
மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
கள்ளக்குறிச்சி
தமிழக செய்திகள்

மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
29 Jan 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் விஜயகுமார் தலைமையில் சுமார் 100 தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று திருக்கோவிலூர் கோட்டாட்சியரிடமும், தொடர்ந்து திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணனிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் தென்பெண்ணையாற்றில் மணல் அள்ளுவதற்கு மாட்டுவண்டிகளுக்கு தனியாக ஒரு அரசு மணல் குவாரி அமைக்க வேண்டும். இதன் மூலம் இந்த தொழிலை நம்பி உள்ள மாட்டுவண்டி தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறும் என கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்