விருதுநகர்
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அறிவிப்பு
|தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் விவரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அறிவித்துள்ளார்.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் விவரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டம் சேத்தூர், முறம்பு, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அழகாபுரி, அருப்புக்கோட்டை, கானா விளக்கு, கண்ணார்பட்டி சந்திப்பு பகுதி வழியாக பசும்பொன்னுக்கு செல்ல வேண்டும்.
சிவகாசியில் இருந்து திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, கானா விளக்கு, கண்ணார்பட்டி ஜங்ஷன் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். விருதுநகர், அருப்புக்கோட்டை, கானா விளக்கு, கண்ணார்பட்டி பட்டி ஜங்ஷன் வழியாக பசும்பொன்ன செல்ல வேண்டும். பந்தல்குடியில் இருந்து அருப்புக்கோட்டை கானா விளக்கு கண்ணார்பட்டி ஜங்ஷன் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, கண்ணார்பட்டி ஜங்ஷன், கமுதி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். நரிக்குடியில் இருந்து பார்த்திபனூர் அபிராமம் வழியாக பசும்பொன்னுக்கு செல்ல வேண்டும்.
சிவகாசியில் இருந்து இரட்டை பாலம், சிவகாசி பஸ் நிலையம், பிள்ளைக்குழி சந்திப்பு, விளாம்பட்டி சந்திப்பு, எஸ்.எச்.வி.என். பள்ளி, மருதுபாண்டியர் மேட்டு தெரு ஆகிய வழித்தடங்களும், ஆவியூர், நரிக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து மீனாட்சிபுரம் ரோடு, மந்திரி ஓடை, முடுக்கன்குளம், நரிக்குடி ஆகிய வழித்தடங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
காரியாபட்டியில் இருந்து திருச்சுழி, எம்.புதுப்பட்டி ஆகிய வழித்தடங்களும், அருப்புக்கோட்டை, திருச்சுழியில் இருந்து ராமலிங்காமில், குலசேகர நல்லூர், திருசசுழி ரோடு, தமிழ்பாடி சந்திப்பு, ராமசாமி பட்டி, அல்லம்பட்டி, மைலி சந்திப்பு, மிதலை குளம் சந்திப்பு ஆகிய பகுதிகளும் தடைசெய்யப்பட்டுள்ளது.
வீரசோழனிலிருந்து பூமாலைப்பட்டி, முத்துராமலிங்கம்புதூர், மண்டலமாணிக்கம், மினாக்குளம், கீழவெம்பூர், அபிராமம் சந்திப்பு, நரிக்குடியிலிருந்து மானாமதுரை ரோடு, ஏ முக்குலத்திலிருந்து ரெட்டை குளம், ஆலந்தூர் திருப்பாச்சேத்தி ரோடு, செங்குளம், கருவாக்குடி, திருப்புவனம் சந்திப்பு ஆகிய பகுதிகளும், பரளச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி, பூலாங்கால் மறவர் பெருங்குடிஆகிய பகுதிகளும், கட்டணூரில் இருந்து கொட்ட பச்சேரி, கருவாக்குடி சந்திப்பு, மானாமதுரை ரோடு ஆகிய பகுதிகள் வழியாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.