< Back
மாநில செய்திகள்
பெரியாரின் மன உறுதி, புரட்சி சிந்தனைகளை எண்ணி பார்க்க வேண்டும் - இளைஞர்களுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

பெரியாரின் மன உறுதி, புரட்சி சிந்தனைகளை எண்ணி பார்க்க வேண்டும் - இளைஞர்களுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

தினத்தந்தி
|
27 Dec 2023 12:11 AM IST

தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா 28-ந்தேதி (நாளை) அன்று சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்

அந்த போராட்டத்தின் வெற்றிக்கு பிறகே 1936-ம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆலய பிரவேச பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

பெரியாரின் புரட்சி சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் நினைத்து பார்க்க வேண்டும். டிசம்பர் 28-ந்தேதி காங்கிரஸ் மகாசபையின் தொடக்க நாள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

வைக்கம் போராட்ட நாள் சென்னையில் கொண்டாடப்படும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் பேரணி நாக்பூரில் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்