< Back
மாநில செய்திகள்
பெரியார் பிறந்த நாள் விழா
நீலகிரி
மாநில செய்திகள்

பெரியார் பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
18 Sept 2023 2:45 AM IST

கோத்தகிரியில் பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது.

கோத்தகிரி

கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பெரியார் 145-வது பிறந்த நாள் விழா நடந்தது. கல்வி பொருளாதார இயக்க மாவட்ட அமைப்பாளர் பத்மநாதன் தலைமை தாங்கினார். வி.சி.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மக்கள் அதிகார மாவட்ட அமைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 'நிர்வாக கயிறு' என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் திராவிடர் கழகம், ரத்ததான நண்பர் குழுவினர், உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்துகொண்டனர். முடிவில் மோகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்