திருப்பத்தூர்
பெரியார் பிறந்த நாள் விழா
|வாணியம்பாடியில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலக வளாகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளர் ஏ.செல்வராஜ், தேவஸ்தானம் ஊராட்சி மன்ற தலைவர் வி.சி.அன்பு, மாவட்ட அமைப்புசாரா ஒட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா, ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.