நாமக்கல்
பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
|நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மோகனூர்
மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆண்டாபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். விழாவுக்கு மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெ.நவலடி தலைமை தாங்கினார். இதில் ஆண்டாபுரம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மோகனூர் ஒன்றியகுழுதலைவர் சரஸ்வதி கருமண்ணன், ஆண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சன்னாசி, ஆரியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜாகண்ணன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கார்த்தி, முத்துசாமி, சரவணன், ஒன்றிய துணை செயலாளார் குணசேகரன், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்
ராசிபுரம் நகர தி.மு.க. சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமை தாங்கி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நகராட்சி தலைவர் கவிதா சங்கர் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலு, அரசு வக்கீல் சரவணன், நகர அவை தலைவர் வைத்தீஸ்வரன், துணை செயலாளர்கள் மோகன், அருண்லால், பொருளாளர் இமாம் அலிசா, மாவட்ட பிரதிநிதி ஆனந்தன், நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்டம் முழுவதும் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராசிபுரம் அருகே சிங்களந்தபுரத்தில் நடந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர் நீலவானத்து நிலவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், கட்சி பொறுப்பாளர்கள் கதிவேந்தன், பெரியசாமி, நந்தன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நகர பேரூர் கழக தி.மு.க. சார்பில் பெரியாரின் 144-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு கே.பி.ராமசாமி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் கே.அன்பழகன், தலைவர் சேரன், தி.மு.க. வார்டு உறுப்பினர்கள், கிளை செயலாளர் மகளிர் அணி ஆகியோர் கலந்துகொண்டனர். அனைவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல சிராப்பள்ளி பேரூர் தி.மு.க. சார்பில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரூராட்சி துணைத் தலைவர் செல்வராஜ், பேரூராட்சித் தலைவி, மகளிர் அணி செயலாளர் லோகாம்பாள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஆர்.புதுப்பட்டி பேரூர் கழக சார்பில் செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ஜெயக்குமார், தலைவி சுமதி, வார்டு உறுப்பினர்கள் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.