< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பெரியார் பல்கலை. தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி - தமிழக அரசு அதிரடி உத்தரவு
|15 July 2022 1:55 PM IST
பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத்தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இக்கேள்வி இடம்பெற்றது குறித்து விசாரிக்க உயர்அலுவலர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த குழு உரிய விசாரணை மேற்கொள்ளும். விசாரணையின் இறுதியில் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை துறை ரீதியான நடவடிக்கையாக இருக்கும் என்று உயர்கல்வித்துறையின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.