< Back
மாநில செய்திகள்
பெரியகுளம் முதல் எழுவனம்பட்டி வரைரூ.3½ கோடியில் சாலை அமைக்கும் பணி
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளம் முதல் எழுவனம்பட்டி வரைரூ.3½ கோடியில் சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
25 Feb 2023 12:15 AM IST

பெரியகுளம் அருகே ரூ.3½ கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

பெரியகுளம் முதல் எழுவனம்பட்டி வரை 12 கிலோ மீட்டர் தூரம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3½ கோடியில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வடுகப்பட்டி அருகே நடைபெற்ற சாலை அமைக்கும் பணியை இந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின், உதவி பொறியாளர் அனுசுயா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்