< Back
மாநில செய்திகள்
பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
20 Aug 2023 12:15 AM IST

பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மருத்துவ சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 51 பேருக்கு அடையாள அட்டை, 45 பேருக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை, 113 பேருக்கு ரெயில் மற்றும் பஸ் பயண அட்டை 74 பேருக்கு தேசிய தரவுத்தள அட்டை, வருவாய்த்துறையின் கீழ் 5 நபர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்து மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, பெரியகுளம் தாசில்தார் அர்ஜூனன், பெரியகுளம் நகர தி.மு.க. செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்