< Back
மாநில செய்திகள்
பெரியகாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

பெரியகாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
13 July 2022 7:02 PM GMT

பெரியகாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூர் கிழக்கு தெருவில் பெரியகாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கன்னிமார், சமேத பொன்னர், சங்கர், மகாமுனி ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து யாகசாலையில் புனிதநீர் வைத்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பெரியகாண்டியம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், தோகைமலை தமிழ்ச்சங்க நிறுவனர் காந்திராஜன், மணப்பாறை சிந்துஜா மருத்துவமனை தலைமை மருத்துவர் கலையரசன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்