< Back
மாநில செய்திகள்
பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
திருச்சி
மாநில செய்திகள்

பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தினத்தந்தி
|
9 Jun 2023 1:14 AM IST

பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

காட்டுப்புத்தூர்:

காட்டுப்புத்தூர் அருகே எம்.புத்தூர் ஊராட்சி எலந்தமடைப்புதூரில் உள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பெரியக்காண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான தங்காள், கன்னிமார்கள், பெரியசாமி, அண்ணாவியார், மலையாண்டி, மகாமுனி, பொன்னர் -சங்கர் உள்பட பல்வேறு பரிவார தெய்வங்கள் காவல்காரன்பட்டி நடேசன் ஸ்தபதிகள் மூலம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு விநாயகர் வழிபாடு உள்ளிட்ட யாகசாலை பூஜைகளை காட்டுப்புத்தூர் செல்வ வாகீஸ்வர சிவாச்சாரியார் குழுவினர் செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க பெரியக்காண்டியம்மன் கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் மணியக்காரர்கள் ஏலூர்ப்பட்டி ஆசிரியர் சந்திரசேகர், எலந்தமடைபுதூர் கனகராஜ் பூசாரி பொன்னம்பலம், வேந்தன்பட்டியை சேர்ந்த நடராஜன், வீரப்பன், முரளி மோகன் உள்பட கோவில் பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்