< Back
மாநில செய்திகள்
பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
28 May 2022 5:20 PM GMT

பெரிய பகண்டை பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

ரிஷிவந்தியம்

பெரியபகண்டை- மையனூர் சாலையோரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் விக்னேஸ்வரபூஜை, வாஸ்து சாந்தி, முதல் மற்றும் 2-வது கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு மங்கள வாத்திய இசை முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு பெரியாயி அம்மனுக்கும், அதைத்தொடர்ந்து 108 பிள்ளையார், சப்த கன்னிகள், அய்யனார் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அபிஷேக ஆராதனை முடிந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை வேலூர் நித்தியானந்தம் சிவம் தலைமையிலான குழுவினரும், விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செல்வகுமார், சண்முகம், உதயகுமார், சரவணன், ரகோத்தமன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்