< Back
மாநில செய்திகள்
சென்னையில் பேரறிவாளன் -வைகோ சந்திப்பு
மாநில செய்திகள்

சென்னையில் பேரறிவாளன் -வைகோ சந்திப்பு

தினத்தந்தி
|
19 May 2022 12:26 PM IST

சென்னை, அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் பேரறிவாளன், அற்புதம்மாள் ,ஆகியோர் சந்தித்துள்ளனர்

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலைசெய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ,, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி ஆகியோரை நேற்று பேரறிவாளன் சந்தித்தார் .

இந்நிலையில் இன்று சென்னை, அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் பேரறிவாளன், அற்புதம்மாள் ,ஆகியோர் சந்தித்துள்ளனர்

மேலும் செய்திகள்