< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன், அற்புதம்மாள் நினைவஞ்சலி
|13 Nov 2022 6:14 PM IST
செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன், அற்புதம்மாள் அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் நளினி, முருகன் உள்பட 6 பேரை விடுதலை செய்தது. ஏற்கனவே கடந்த மே மாதம் 18-ந்தேதி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி உயிர் தியாகம் செய்த செங்கொடியை நினைவு கூரும் வகையில் காஞ்சீபுரம் மேல்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள செங்கொடியூருக்கு பேரறிவாளன் மற்றும் அவரது தயார் அற்புதம்மாள் ஆகியோர் வருகை தந்து செங்கொடியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.