தூத்துக்குடி
பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுபோட்டி
|தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுபோட்டி வியாழக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பேச்சு போட்டி
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும், வருகிற 17-ந் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
பரிசு
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு செ்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.