< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் வக்கனையார் கோவில் கும்பாபிஷேகம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் வக்கனையார் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
7 Sep 2022 6:21 PM GMT

பெரம்பலூர் வக்கனையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் தலையாட்டி சித்தர் கோவில் அருகே அய்யனார், பெரியசாமி கோவிலும் மற்றும் அதனருகே வக்கனையார் கோவிலும் உள்ளன. இந்த கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8.30 மணிக்குள் யாகபூஜை ஹோமம், நாடி சந்தானம், திரவியஹுதி, பூர்ணாஹுதி, யாத்திராதானம் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. இதையடுத்து காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் அய்யனார், பெரியசாமி கோவிலின் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அய்யனார், பெரியசாமி ஆகிய சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.45 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் வக்கனையார் கோவில் கலசங்களுக்கும், வக்கனையார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் குடிபாட்டு மக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்