< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் நீச்சல்குளம்-உடற்பயிற்சி கூடம் இன்று முதல் திறப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் நீச்சல்குளம்-உடற்பயிற்சி கூடம் இன்று முதல் திறப்பு

தினத்தந்தி
|
24 May 2022 1:55 AM IST

பெரம்பலூர் நீச்சல்குளம்-உடற்பயிற்சி கூடம் இன்று முதல் திறக்கப்படுகிறது.

பெரம்பலூர்:

பழுது காரணமாக...

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட Perambalur Swimming Pool-Gym opens todayஎம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளமும், உடற்பயிற்சி கூடமும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கின்போது அரசின் உத்தரவின்படி மூடப்பட்டது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கில் அரசால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் பெரம்பலூர் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி பழுதானதால் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் ஆகியவை பழுது பார்த்து புனரமைக்கப்பட்டது. மேலும் நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருந்தது. பழுது பார்த்து புனரமைக்கப்பட்டதால் நீச்சல் குளமும், உடற்பயிற்சி கூடமும் கடந்த 13-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அன்றைய தினம் திறக்கப்படாததால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏமாற்றம் அடைந்தனர்.

திறக்க உத்தரவு

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தையும், உடற்பயிற்சி கூடத்தையும் உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உடனடியாக நீச்சல் குளத்தையும், உடற்பயிற்சி கூடத்தையும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்க உத்தரவிட்டார். அதன்படி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளமும், உடற்பயிற்சி கூடமும் இன்று முதல் திறக்கப்படுகிறது. அதனை திறக்க உத்தரவிட்ட கலெக்டருக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பல்வேறு தரப்பினரும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

நீச்சல் பயிற்சி

நீச்சல் குளத்தில் குளிப்பதற்கும், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறவும் குறிப்பிட்ட கட்டணம் ஜி.எஸ்.டி. வரியுடன் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்படும். இங்கு வருபவர்கள் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். மேலும் நீச்சல்குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நாளை (புதன்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ளது. அதற்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியுடன் வசூலிக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்