< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்: ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பலி..!
மாநில செய்திகள்

பெரம்பலூர்: ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பலி..!

தினத்தந்தி
|
5 Jun 2023 6:58 AM IST

பெரம்பலூரில் ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பலியாகினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டபோது ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜோசப் பள்ளி அருகே கார் மீது டிராக்டர் மோதியதில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

ஆம்னி பேருந்து மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரஜேந்திரன், காரில் பயணம் செய்த குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 5 பேரும் வேறு ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்