< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பெரம்பலூர் அரசு கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை
|6 July 2023 12:00 AM IST
பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டில் இடம் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள், நேரடியாக விண்ணப்பித்தவர்களும் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.