< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நேரில் விண்ணப்பம்
|15 Jun 2023 12:00 AM IST
பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நேரில் விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு 2 கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் பி.எஸ்சி. கணிதம், வேதியியல், இயற்பியல், பி.ஏ. ஆங்கிலம், சுற்றுலா-பயண மேலாண்மை மற்றும் சமூகப்பணி இளங்கலை (பி.எஸ்.டபிள்யூ.) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கல்லூரியில் நேரில் வழங்கப்படவுள்ளது, என்று கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.