பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் வேண்டும்
பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிப்பதற்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி குடிநீர் போதிய அளவில் வினியோகம் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி குடிநீரை போதிய அளவில் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பெண்கள், பெரம்பலூர்.
எரியாத தெருவிளக்குகள்
பெரம்பலூர் ரோவர் பள்ளி சாலையில் நள்ளிரவு நேரத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் தெரு விளக்குகள் எரிவது இல்லை. இதனால் இந்த சாலை வழியாக நள்ளிரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் வழிபறி, திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஜெயமாறன், பெரம்பலூர்.
நோயாளிகளை கடிக்க பாயும் தெருநாய்கள்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றனர். இவற்றில் ஒரு சில நாய்கள் வெறிபிடித்து இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும், டாக்டர்கள், நர்சுகளை கடிக்க பாய்கிறது. இதனால் பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நோயாளிகள், பெரம்பலூர்.