பெரம்பலூர் முன்விரோதம்: வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை ; ஒருவர் கைது
|படுகாயம் அடைந்த அஜித்தை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மங்களமேடு அடுத்துள்ள நம்மியூர் கிராமத்தில் அருகே நம்பியூர் கிராமம் நரியோடையைச் சேர்ந்தவர் வாழ்ந்து வருகின்றனர்கள் இதில் சுப்பிரமணி மகன் ரஜினி (வயது 45) இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அல்லித்துரை மகன் அஜித்(26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த ரஜினி, அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்றி போய் அடிதடி ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரஜினி, தான் உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து அஜித்தை சுட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அஜித்தை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அஜித்தை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அஜித்திற்கு முதல் திருமணம் ஆகி மனைவி இறந்த நிலையில் ஒரு மகன் இருக்கும் நிலையில் அவருக்கு மூன்று மாதத்துக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது,
இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினியை கைஅது சிறையில் அடைத்தனர்.