< Back
மாநில செய்திகள்
பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தினத்தந்தி
|
18 April 2023 9:33 AM GMT

பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில் 23-ம் ஆண்டு சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில்சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விழாவின் 7-ம் நாளான நேற்று காலை 9 மணி அளவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வைகுண்ட பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

அதை தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. அப்போது வீடுகள் தோறும் பொதுமக்கள் சாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை பேரம்பாக்கம் கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்