< Back
மாநில செய்திகள்
ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெருமுனை பிரசாரம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெருமுனை பிரசாரம்

தினத்தந்தி
|
21 April 2023 12:15 AM IST

ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும், அதானி சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், மே 1-ந்தேதி அதானி அலுவலகத்தை முற்றுகையிடுவதையொட்டி விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், மந்தக்கரை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் மகேந்திரவர்மன், ஒருங்கிணைப்பாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்