< Back
மாநில செய்திகள்
மாங்காட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனை கூட்டம் -கமல்ஹாசன் பங்கேற்பு
மாநில செய்திகள்

மாங்காட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனை கூட்டம் -கமல்ஹாசன் பங்கேற்பு

தினத்தந்தி
|
17 July 2022 6:45 PM GMT

மாங்காட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனை கூட்டம் கமல்ஹாசன் பங்கேற்பு.

பூந்தமல்லி,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டலம், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என 600 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகத்தை வகுப்பது தொடர்பாகவும் கட்சியினருக்கு கமல்ஹாசன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கமல் கலைக்கூடம் என்ற பிரிவு தொடங்கப்பட்டது.

மேலும் செய்திகள்