< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கப்பணிகள்; தன்னார்வலர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு
|3 Sept 2022 11:49 PM IST
சிறப்பாக பணியாற்றிய 130-க்கும் மேற்பட்டோருக்கு மேயர் பிரியா விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறப்பாக பணியாற்றிய 130-க்கும் மேற்பட்டோருக்கு மேயர் பிரியா விருதுகள் வழங்கி கவுரவித்தார். மேலும் அவர்களது பணியை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சென்னை துணை மேயர், மாநகராட்சி ஆணையர், ஆளுங்கட்சி தலைவர், சுகாதார குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.