< Back
மாநில செய்திகள்
அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு
மாநில செய்திகள்

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

தினத்தந்தி
|
14 Jan 2023 2:11 PM IST

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற 23-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடும் போட்டியில், மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் முதலிடத்தையும், ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பிரிவில் 2-வது இடத்தையும் பெற்ற தமிழ்நாடு காவல் துறையினரை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது.

மேலும், கைத்துப்பாக்கி சுடுதல் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர் ஆர்.சதிசிவனேஷையும் வாழ்த்துகிறோம். மத்திய பாதுகாப்புப் படையைச் சேராத, மாநில காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் முதலிடம் வெல்வது இதுவே முதல்முறை என்பது மேலும் பெருமைக்குரியது." என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்