< Back
மாநில செய்திகள்
மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாக குழு கூட்டம்: கமல்ஹாசன் அழைப்பு
மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாக குழு கூட்டம்: கமல்ஹாசன் அழைப்பு

தினத்தந்தி
|
21 Jan 2024 12:53 PM IST

அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் .

சென்னை,

மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 11.30 மணியளவில் நடைபெறும். அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்