மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் அதிரடி கைது
|ஆட்டோ ஓட்டுனரை தாக்கியதாக மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர். இவர் வழக்கம் போல் பயணிகளை ஏற்றி கொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் காமராஜர் வளைவு சாலையில் உள்ள சிக்கனலில் நின்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
இந்நிலையில் முன்னால் நின்ற பாலமுருகனை ஆட்டோவை நகர்த்தி வழிவிடுமாறு முத்துக்குமார் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் கைகலப்பும் ஏற்பட்டது. இதில் முத்துக்குமார் தனது ஹெல்மெட்டை எடுத்து பாலமுருகன் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பாலமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் புகாரளித்ததில், முத்துக்குமார் மீது கொலை முயற்சி மற்றும் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.