< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
1 Aug 2022 9:50 PM IST

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அடிப்படை வசதிகள், இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மொத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கந்தசாமி, கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், தனித்துணை கலெக்டர் ஷீலா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்