< Back
மாநில செய்திகள்
மக்கள் குறை தீர்வு கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மக்கள் குறை தீர்வு கூட்டம்

தினத்தந்தி
|
15 May 2023 6:23 PM IST

ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.

ஆரணி

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்தல், விபத்து நிவாரணம், விதவை உதவித்தொகை உள்ளிட்ட 29 துறைகளின் சார்பாக 47 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்.

மனுக்களை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் அதன்மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதில் ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமாரசாமி, ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகா உள்ளடக்கிய அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்