< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
மக்கள் குறை தீர்வு கூட்டம்
|3 April 2023 5:15 PM IST
ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.
ஆரணி
ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது.
இதில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, நிலம் அளந்து தருதல், ஆதரவற்ற விதவை சான்று வழங்க கோருதல் உள்பட 33 துறைகளை சார்ந்த 56 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமாரவேலு மற்றும் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் தாலுகா உள்ளடங்கிய அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.