< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
|22 Dec 2022 2:22 AM IST
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாதத்தின் முதல் புதன் மற்றும் 3-வது புதன் கிழமைகளில் நடந்து வருகிறது. இதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் நேரில் சந்தித்து 34 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள்.
மேலும் முந்தைய வாரங்களில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த 30 மனுக்களின் மனுதாரர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, மாரிராஜன் ஆகியோர் தலைமையில் மனு விசாரிக்கப்பட்டு 9 மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளது.