< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம்போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம்

தினத்தந்தி
|
22 Dec 2022 12:15 AM IST

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து புகார் மனுக்களை கொடுத்தனர். நிலஅபகரிப்பு, பணம் கொடுக்கல், வாங்கல், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், ஆன்லைன் மோசடி, முன்விரோத தகராறு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 79 பேர் புகார் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதன் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மித்ரன், சம்பத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்