< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
11 July 2023 2:05 AM IST

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 415 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா அறிவுறுத்தினார்.கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாலை தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்