< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
20 Jun 2023 9:33 AM GMT

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 230 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,67,000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் மோட்டார் சைக்கிள், 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.1,06,000 மதிப்பிலான முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் மோட்டார் சைக்கிளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், இயற்கை மரணம் அடைந்த 4 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்கான நிதியுதவி ரூ.68,000 ஆயிரம் பேன்ற நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்படும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் 2022-23 போட்டியில் மாநில அளவில் வெண்கலப் பதக்கம் பெற்ற ஒவியா ஸ்ரீ மற்றும் தாஸ் பிரகாஷ் பதக்கங்களை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து பாராட்டு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சீபுரம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்