< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

தினத்தந்தி
|
6 Feb 2023 4:17 PM GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அலுவலர்களுடன் ஆய்வு

மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

குறைதீர்வு நாள் கூட்டத்தையொட்டி தீக்குளிக்க முயற்சிப்பது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் நுழைவு வாயிலில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்