< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
2 Aug 2022 12:03 PM IST

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து 232 மனுக்கள் பெற்றப்பட்டது. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் மண்டலம் வையாவூரை சேர்ந்த 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்